News January 9, 2025

நாளை தாமதமாக புறப்படும் ரயில்கள்

image

மதுரை திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஜனவரி 9 அன்று மதுரையிலிருந்து மாலை 05.50 மணிக்கு தாமதமாக புறப்படும். நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் ரயில் ஜனவரி 9 அன்று நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு காலதாமதமாக புறப்படும். திருச்செந்தூர் வாஞ்சி மணியாச்சி ரயில் ஜனவரி 10 அன்று திருச்செந்தூரில் இருந்து மாலை 03.40 மணிக்கு தாமதமாக புறப்படும்.

Similar News

News February 4, 2026

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி

image

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்து சிறையில் உள்ள பழனிக்குமார், ஜெயப்பிரியா ஆகியோர் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

News February 4, 2026

மதுரை: டாஸ்மாக்குள் தூக்கிட்டு தற்கொலை

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சார்ந்த பாலா என்பவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக மதுரை முல்லைநகர் பகுதியில் வசித்ததுடன் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். மனைவி பிரிவால் கவலையில் மது அருந்தி வந்தாக தெரிகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை பிபி குளம் டாஸ்மாக் கடைபாரின் ஆஸ்பெட்டாஸை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து, மது குடித்த நிலையில் பின்னர் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News February 4, 2026

மதுரை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

மதுரை மாவட்ட ஆட்சியர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், 9-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை கல்வித்தகுதிக்கேற்ப மாதம் ரூ.200 முதல் ரூ.600 வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரையும் உதவித்தொகை வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் (மாற்றுத்திறனாளிகள் 1 ஆண்டு) நிறைவு செய்ய வேண்டும்.

error: Content is protected !!