News October 18, 2024
நாளை குறைகேட்பு முகாம்

கோவை கலெக்டர் அலுவலகம் நேற்று எடுத்த செய்தி குறிப்பில், பொது விநியோக திட்ட சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக மாதந்தோறும் 2வது சனிக்கிழமை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைகேட்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நாளை சிறப்பு வட்ட வழங்கல் அலுவலகங்களில் முகாம்கள் நடைபெற உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News April 29, 2025
ரயில்வேயில் உடனடி வேலை வாய்ப்பு

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
News April 29, 2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நீதிபதி மாற்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே.13இல் தீர்ப்பளிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி அறிக்கை வெளியிட்டார். அதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News April 28, 2025
கோவையில் பாலியல் தொழில்: 2 பேர் கைது

கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு வீட்டில், இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டினை வாடகைக்கு எடுத்து, மகேஸ்வரன் என்பவர் பாலியல் தொழில் செய்து வந்தது தெரிந்தது. பின்னர் அவரையும், அவருடன் இருந்த 38 வயது பெண்ணையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.