News January 25, 2026
நாளை குடியரசு தினம்: ஏற்பாடுகள் தீவிரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் திங்கள்கிழமை (ஜன.26) காலை 8.05 மணிக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தேசியக் கொடியேற்றுகிறாா். இதைத் தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
Similar News
News January 25, 2026
விழுப்புரம்: இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<
News January 25, 2026
விழுப்புரம்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

விழுப்புரம் மக்களே,அதிக மின் கட்டணம், மின்தடை,மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News January 25, 2026
விழுப்புரம்: மயிலம் அருகே கோர விபத்து!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கன்னிகாபுரம் பகுதியில், நேற்று (ஜன. 24) சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், மோதிய வாகனம் நிற்காமல் சென்ற நிலையில், மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானவர் யார் மற்றும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


