News January 22, 2025
நாளை கால்நடை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

ஏனாத்தூரில் உள்ள கால்நடைத்துறை விவசாயிகள் பயிற்சி மையத்தில் நாளை (ஜனவரி 23) வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் முயல் வளர்ப்பு, முயல் வகைகள், நோய் தடுப்பு, பராமரிப்பு பணிகள், வளர்ப்பு உபகரணங்கள், தீவனம் பற்றி இலவசமாக கால்நடைத்துறை பயிற்சி மைய இயக்குனர் டாக்டர் பிரேம வள்ளி அவர்கள் பயிற்சியும் ஆலோசனைகளும் அளிக்க உள்ளார். விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News November 15, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்
News November 14, 2025
குன்றத்தூரில் துணை மின் நிலையத்தை திறந்த அமைச்சர்

இன்று (நவ.14) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் உள்ளனர்.
News November 14, 2025
காஞ்சிபுரம்:லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27237139) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்


