News August 21, 2025

நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடம்

image

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட கீழநம்மகுறிச்சி சமுதாயக்கூடம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மூன்று மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதேபோல, மன்னார்குடி தாலுக்காவிற்கு உட்பட்ட உள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள விகேஎஸ் திருமண மண்டபத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி

image

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. தாட்கோ நிறுவனம் வழங்கும் இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள், தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகி அறிந்துகொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 21, 2025

திருவாரூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

திருவாரூர்:கூட்டுறவுத்துறை தேர்விற்கு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் 2,513 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் செப்.1-ம் தேதிமுதல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT

error: Content is protected !!