News September 22, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலம் செப்டம்பர் 23 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்1) கொண்டலாம்பட்டி நேரு கலையரங்கம் 2)தாரமங்கலம் நகராட்சி சமுதாயக்கூடம் தாரமங்கலம் 3)மேச்சேரி சுமங்கலி திருமண மண்டபம்4) மாசி நாயக்கன்பட்டி கஸ்தூரிபாய் திருமண மண்டபம் 5)கெங்கவல்லி ஆர் கே எஸ் திருமண மண்டபம்6) இடைப்பாடி மாரிமுத்து கவுண்டர் ஆராயி அம்மாள் திருமண மண்டபம்
Similar News
News September 23, 2025
சேலத்தில் செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீடிப்பு

சேலம் மாநகரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்காக விண்ணப்பங்கள் இம்மாதம் 22ஆம் தேதி வரை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே மாநகர காவல் ஆணையாளர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான கால அவகாசத்தை நீடித்து இம்மாதம் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி தெரிவித்துள்ளார்
News September 22, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 365 விண்ணப்பங்கள் குவிந்தன!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.22) நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 365 மனுக்கள் வரப்பெற்றன.
News September 22, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.22) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.