News December 14, 2025
நாளை அரையாண்டு தேர்வு.. மாணவர்களே ரெடியா இருங்க!

தமிழகத்தில் நாளை (டிச.15) 1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. டிச.23 வரை தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10 முதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST
Similar News
News March 1, 2026
டி20 WC டாஸ்: இந்தியா பவுலிங்

வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை விளையாடிய அதே அணியுடன் இந்தியா மீண்டும் களமிறங்குகிறது.
News March 1, 2026
‘வாய் கிழிய பேசுவதை தவிர திமுக ஒன்றுமே செய்யவில்லை’

தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என PM மோடி கூறியுள்ளார். பணம்தான் நமக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதே அவர்களின் எண்ணம் என்ற அவர், திமுக ஏழைகளுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு உரிமைகளை பற்றி வாய் கிழிய திமுக பேசுவதாகவும், பேச்சை தவிர திமுக ஒன்றுமே செய்ததில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
News March 1, 2026
World War 3.. அன்றே கணித்தாரா பாபா வங்கா?

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். இவர், 2026-ல் 3-ம் உலகப் போர் உருவாகலாம், அதில் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முக்கியத் தொடர்பு இருக்கும் என கணித்திருந்தார். தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் நடந்து, மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் இருப்பதால், அவரது கணிப்பு உண்மையாகி வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?


