News November 2, 2025

நாளை அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

image

தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை முதல் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என TN அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக, முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி பொருள்கள் வழங்கப்பட இருந்தது. தற்போது, 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருள்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 3, 2025

நவம்பர் 3: வரலாற்றில் இன்று

image

*1838 – பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. *1933 – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் பிறந்தநாள். *1957 – லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது. *1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். *2014 – உலக வர்த்தக மையம் ஒன்று திறக்கப்பட்டது.

News November 3, 2025

லெஜெண்ட்ஸ் பட்டியலில் ஹர்மன்பிரீத் கவுர்

image

அதிக வயதில் மகளிர் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றுள்ளார். அவருக்கு வயது 36 வருடம் 239 நாட்களாகும். இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இந்திய லெஜெண்ட்களின் பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார். கபில் தேவ் (1983 ODI), தோனி (2007 டி20, 2011 ODI), ரோஹித் (2024 டி20) ஆகியோர் தலைமையில் இந்தியா உலகக் கோப்பைகளை வென்று இருக்கிறது.

News November 3, 2025

இந்திய அணியின் வெற்றிப் பாதை

image

52 வருட மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. குரூப் ஸ்டேஜில் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்திற்கு எதிராக வெற்றியும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்திற்கு எதிராக தோல்வியும் கண்ட இந்திய அணி புள்ளி பட்டியலில் 4-வது இடமே பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிப் பாதையை போட்டோக்களாக தந்துள்ளோம். SWIPE செய்து பார்க்கவும்.

error: Content is protected !!