News January 8, 2026

நாளை அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு?

image

டெல்லியில் <<18795902>>அமித்ஷாவை<<>> சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய EPS-ஐ, நாளை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை EPS வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, பாஜவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் மற்றும் டிடிவி தினகரன் விவகாரம் பற்றியும் இருவரும் ஆலோசித்து, முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News January 11, 2026

₹15,000 ஓய்வூதியம் தரவேண்டும்: ஜி.கே.வாசன்

image

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். அவர்களுக்கு ஓய்வூதியமாக ₹2,000 வழங்குவது போதுமானது அல்ல என்றும், அவர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹15,000 அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 11, 2026

10 மணி நேரத்தில் பராசக்தி சென்சார் சேஞ்சஸ்

image

‘பராசக்தி’ ரிலீஸுக்கு முந்தைய நாள் (ஜன.9) தான் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. அதற்கு முன்பு 25 மாற்றங்களை CBFC கூறியதும், ராணுவ முகாம் போல் படக்குழு வேலை செய்ததாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். என்ன மாற்றங்களை செய்யலாம் என விரைவாக & தெளிவாக பரிசீலித்ததாகவும், 10 மணி நேரத்தில் படத்தில் மாற்றங்களை மேற்கொண்டதாகவும் சிவா தெரிவித்துள்ளார். நீங்கள் படம் பார்த்திருந்தால் சென்சார் மாற்றங்கள் எப்படி உள்ளன?

News January 11, 2026

பாமகவுக்காக விசிகவை சரிகட்டுகிறதா திமுக?

image

அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டதால், ராமதாஸ் தரப்பு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். வன்னியர் சங்கம் முழுவதும் ராமதாஸ் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவரது தரப்பை விட திமுகவுக்கு மனமில்லை என்கின்றனர். அதேநேரம், INDIA கூட்டணியில் பாமக வந்தால் விசிக வெளியேறும் நிலையில் உள்ளதால், அவர்களை சரிகட்டவும் திமுக மூத்த அமைச்சர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது. ராமதாஸ் – திருமா கூட்டணி சாத்தியமா?

error: Content is protected !!