News December 18, 2025
நாளைய தமிழகமே விஜய்தான்: KAS

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார். இது சாதாரணமாக கூடிய கூட்டம் அல்ல, எதிர்கால தமிழகத்தை உருவாக்க கூடிய கூட்டம் எனக் கூறிய அவர், ஆண்டுக்கு 500 கோடி ரூபாயை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வந்துள்ளார். அவர் (விஜய்) கை நீட்டும் நபர்கள்தான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
Similar News
News December 23, 2025
OPS, தினகரனை EPS சேர்ப்பாரா? ரகுபதி

தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, இங்குள்ள அரசியல் தட்பவெப்பநிலை தெரியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பாஜக நினைப்பது நடக்காது என கூறிய அவர், எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று குறிப்பிட்டார். மேலும், ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் எனக்கூறும் EPS, தினகரன் மற்றும் OPS-ஐ சேர்ப்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 23, 2025
10-வது போதும்.. தமிழக அரசில் ₹90,000 சம்பளம்!

✱சென்னை நகர நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தில் உள்ள 309 Office Assistant காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱வேலைக்கு ஏற்ப கல்வித்தகுதி 10-ம் வகுப்பு முதல் MBBS வரை மாறுபடுகிறது ✱ தேர்ச்சி முறை: Shortlisting of Applications, Personal Interview ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 5 ✱விண்ணப்பிக்க படிவம் பெற <
News December 23, 2025
யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

சேலத்தில் டிச.29-ல் பாமக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பாமக பொதுக்குழு கூட்டவும், நடத்தவும் கட்சி தலைவரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல என்றும், அதில் எடுக்கும் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


