News November 6, 2025
நாளையுடன் முடிகிறது… உடனே இதை பண்ணுங்க

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை அப்லோடு செய்ய நாளையே(நவ.7) கடைசி நாள் என TNPSC தெரிவித்துள்ளது. நாளை சான்றிதழ்களை அப்லோடு செய்யாதவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல பரிசீலிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<
Similar News
News February 17, 2026
ஈரானிய கப்பல்களை சிறைபிடித்த இந்தியா

மும்பையில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் டேங்கர்களை இந்திய கடற்படை சிறைபிடித்துள்ளது. இந்த கப்பல்கள் கடலில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடற்படையிடம் இருந்து பிடிபடுவதை தடுக்க அடிக்கடி அடையாளத்தை மாற்றும் இந்த கப்பல் இந்தியன் கடற்படையிடம் சிக்கியுள்ளது.
News February 17, 2026
பொதுத்தேர்வுக்கு நேரமாச்சு.. கலக்குங்க மாணவர்களே!

CBSE 10, +2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 43.67 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். நடப்பாண்டு முதல், <<19161497>>தேர்வு விதிகளில் மாற்றம்<<>> கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்களே, தேர்வறைக்கு கடைசி நேரத்தில் செல்ல வேண்டாம். சற்று முன்னதாகவே சென்று தயாராகுங்கள். பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST!
News February 17, 2026
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் அடுத்து என்ன நடக்கும்?

திமுக உடனான கூட்டணிக்கு எதிராக காங்கிரஸில் <<19148133>>மாணிக்கம் தாகூர்<<>>, <<19149241>>பிரவீன் சக்கரவர்த்தி<<>> ஆகியோர் அடிக்கடி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு கடிவாளம் போட ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். இருவர் மீதும் நடவடிக்கை எடுத்த பிறகே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நிபந்தனை விதித்து ராகுலுக்கு ஸ்டாலின் மெசேஜ் அனுப்பியுள்ளாராம். இதனால், கூட்டணியில் அடுத்து என்ன நடக்குமென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


