News April 13, 2025

நாளைக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

image

ஏப்ரல் 15 அன்று மீன் பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன் பிடி விசை படகுகளை நாளை 14-4-2025 இரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்திற்கு கரை திரும்பிட படகு உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 19, 2025

நாகை: பாஜகவினர் திடீர் சாலை மறியல்

image

நாகை மாவட்டம், திருமருகல் பஸ் நிலையம் எதிரில் பாஜகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் (அக்.17) ஈடுப்பட்டனர். திருமருகல் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் சேரும் சகதியுமாக இருப்பதால், அதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அதனை கண்டித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News October 18, 2025

நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

நாகை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

நாகை: இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க நிதி

image

வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க இஸ்லாமிய மாணவ-மாணவிகளுக்கு, தலா ரூ.36 லட்சம் வீதம் என 10 மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளர்கள் இதற்கான விண்ணப்பங்களை http://www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர்

error: Content is protected !!