News March 15, 2025
நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

தெரு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வப்பன் மன்னா (61) என்பவர் சிகிச்சை பலனின்றி 10 நாட்களுக்குப்பிறகு இன்று உயிரிழந்தார். அவரை கடித்த நாய், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கடி பட்டவரும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எச்சரிக்கையுடன் இருங்கள்.
Similar News
News March 15, 2025
மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
News March 15, 2025
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்த மோசஸ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின், அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அப்பெண் விலகியிருக்கிறார். பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து பெண்ணின் உறவினருக்கு அனுப்பியதோடு, அதனை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியதால் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
News March 14, 2025
கேட்ட வரங்களை தரும் நிமிஷாம்பாள் கோவில்..

சென்னை பாரிமுனை உள்ள அன்னை காளிகாம்பாள் கோவில் அருகில், மிக குறுகலாக ஒரு பகுதியில் தான் அன்னை நிமிஷாம்பாள் கோயில் அமைந்துள்ளது. தசமி திதியில் இந்த கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தொடர்ந்து பத்து தசமி திதி வந்து வழிபட்டால் ஐந்தாவது தசமி நிறைவடைவதற்குள்ளாகவே அன்னை பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க