News September 25, 2025
நாய்கள் பராமரிப்புக்காக ரூ.7.67 கோடி ஒதுக்கீடு

சென்னையில் தெருநாய்களைப் பராமரிக்க வேளச்சேரி, மாதவரம் ஆகிய இரண்டு பகுதிகளில் புதிய மையங்களை மாநகராட்சி அமைக்க உள்ளது. இதற்காக ரூ.7.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரேபிஸ் மற்றும் ஆக்ரோஷமான குணம் கொண்ட சுமார் 500 நாய்களைப் பிடித்து இந்த மையங்களில் வைத்து பராமரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
Similar News
News September 25, 2025
சென்னை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News September 25, 2025
‘Chennai One’ வச்சு இருக்கீங்களா? உங்களுக்கு தான் இது!

சென்னை மக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் ‘சென்னை ஒன்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி மூலம் பேருந்து, மெட்ரோ, புறநகர் மின்சார ரயில், ஆட்டோ மற்றும் கார் போன்ற அனைத்து போக்குவரத்துக்கும் ஒரே QR குறியீடு பயணச்சீட்டைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தச் செயலியில் எடுக்கும் மின்சார ரயிலுக்கான பயணச்சீட்டு 3 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் என ரயில்வே அறிவித்துள்ளது.
News September 25, 2025
சென்னையில் சினிமா நடன கலைஞர் கைது

சென்னை அசோக் நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சினிமா நடன கலைஞர் பிரவீன் (27) மற்றும் அவரது 11 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மெத்தபெட்டமைன், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இவர்கள், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘கூலி’ படம் உட்பட பல படங்களில் நடனமாடியுள்ளனர். சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்றாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.