News September 2, 2025
நாய்கள் கருத்தடை மையத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில், இயங்கி வரும் நாய்கள் கருத்தடை மையத்தினை, இன்று(செப்.2) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் சண்முகம், வட்டாட்சியர் ஆறுமுகம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 3, 2025
குடியரசு தலைவரை வரவேற்ற துணை முதல்வர்

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் த.மோ.அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர். அரசின் சார்பில் அவருக்குப் புத்தகம் வழங்கப்பட்டது. காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
News September 3, 2025
தாவரவியல் பூங்காவினை ஆய்வு செய்த ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் 137 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் தாவரவியல் பூங்காவை மாவட்ட ஆட்சியர் சினேகா ஆய்வு செய்தார். நகர் மன்றத் தலைவர் சண்முகம், நகராட்சி மண்டல இயக்குநர் லட்சுமி, நகராட்சி ஆணையர் ரமேஷ், மற்றும் வட்டாட்சியர் ஆறுமுகம் ஆகியோர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.
News September 2, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மாமல்லபுரம், மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் காவலர்கள் ரோந்து செல்வார்கள். அவசர உதவிக்கு பொதுமக்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.