News March 19, 2025
நாய்களுக்கு வாய் மூடி இல்லாவிட்டால் அபராதம்

சென்னையில் உள்ள நாய் வளர்பவர்களுக்கான கவனத்திற்கு! வளர்ப்பு நாய்களை பொது இடங்களில் அழைத்து வரும் போது வாய்மூடி அணிவிக்காவிட்டால் 1,000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு.சென்னையில் வளர்ப்பு மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கான விதிமுறைகளை மாநகராட்சி கடுமையாக்க உள்ளது.
Similar News
News March 19, 2025
பெட்ரோல், டீசல் வாகனங்கள் படிப்படியாக மாற்றம்

இன்று சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கை ரிப்பன் கட்டிட வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் வகையில் அவை அனைத்தும் படிப்படியாக இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
News March 19, 2025
நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும்

சென்னை பெருநகர மாநகராட்சி இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியருக்கு பயணப்படி மற்றும் உணவுப்படி வழங்குதல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும் என புதிய அறிவிப்பு.
News March 19, 2025
மகப்பேறு மருத்துவமனைகளுக்கு கிருமி நாசினி புகைக்கருவிகள்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 16 நகர்ப்புர சமுதாய நல மையங்கள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் 3 மகப்பேறு மருத்துவமனைகள் என 19 மருத்துவமனைகளுக்கும் தலா ஒன்று வீதம் 19 கிருமிநாசினி புகைக்கருவிகள் (Fogger Machine) தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திடமிருந்து (TNMSC) கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.