News March 24, 2024
நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திருவண்ணாமலையில் DR இரா.ரமேஷ் பாபு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 7, 2025
திருப்பத்தூருக்கு இப்படி ஒரு சிறப்பா?!

திருப்பத்தூர், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழில் நகரமாகும். இது இந்தியாவின் தலைசிறந்த தோல் தொழில் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நகரில் காலணிகள் தயாரிப்பு, தோல் ஜாக்கெட்டுகள், கைப்பைகள், பெல்ட், ஜாக்கெட் போன்ற ஆடைகள் உற்பத்தி தொழில்கள் பரவலாக நடக்கின்றன. பல நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இங்கு இயங்குகின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் திருப்பத்தூருக்கு முக்கிய பங்கு உண்டு. ஷேர் பண்ணுங்க!
News July 7, 2025
ஆம்பூரில் 4 கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த ஆசிப் என்ற இளைஞர் வேலூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் 4 கைத்துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று (ஜூலை 06) ஆசிப்பை ஆம்பூர் நகர போலீசார் கைது செய்து அவரது சகோதரி வீட்டிலிருந்து 4 கைத்துப்பாகிகளை பறிமுதல் செய்தனர்.
News July 6, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.