News March 24, 2024
நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, தேனியில் மருத்துவர் மதன் ஜெயபால் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 2, 2026
தேனி: Whatsapp-ல் இலவச சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

தேனி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News February 2, 2026
தேனி: முல்லைப் பெரியாற்றில் மூழ்கி வாலிபர் பலி

கம்பம் அருகே காமயுகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வினித் (33). ஜன.30 அன்று வீட்டை விட்டு சென்றவர் திருப்ப வராத காரணத்தால் பெற்றோர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று கூடலூர் லோயர்கேம்ப் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது குருவனூத்து பாலம் அருகே முல்லைப்பெரியாற்றில் மிதந்த நிலையில் வினித்தின் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News February 2, 2026
தேனி: NO EXAM.. ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸ் வேலை

தேனி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 10 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <


