News March 25, 2024
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா அவர்கள் இன்று புதுச்சேரி வழுதாவூர் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து புதுச்சேரி
தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கன் அவர்களிடம் மேனகா அவர்கள் இன்று மனு தாக்கல் செய்தார்.
Similar News
News December 11, 2025
காரைக்கால் சிறப்பு மருத்துவம் அறிவிப்பு

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் சனிக்கிழமை (13.12.2025) அன்று வருகை தந்து காலை 10 மணி முதல் 12 மணி வரை மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் தர உள்ளார்கள். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
News December 11, 2025
புதுச்சேரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!
News December 11, 2025
புதுச்சேரி: ஈஷா சிங்கிற்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக விஜயின் பொதுக்கூட்டம் அமைதியாக நிறைவடைந்தது. இதில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் சிறப்பாக காவல் ஏற்பாடுகளை செய்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிற்கு, புதுச்சேரி மாநிலம உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.


