News January 5, 2026
நாமக்கல்: UPI அதிகம் யூஸ் பண்றீங்களா? UPDATE

நாமக்கல் மக்களே 123PAY UPI மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 8045163666 என்ற எண்ணுக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 30, 2026
நாமக்கல்லில் குறைந்த விலையில் வாகனம் வாங்கனுமா?

நாமக்கல் மாவட்ட காவல்துறையால் பயன் படுத்தப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் அன்று காலை 9:45 மணிக்குள் ரூ.5,000 முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். SHARE IT
News January 30, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் முன்மாதிரி திருநங்கையர் விருது பெற, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இவ்விருது பெற தகுதியான திருநங்கைகள், அரசின் இணையதளத்தில் மட்டும் வரும் பிப். 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
இரவு நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


