News November 6, 2025
நாமக்கல்: FREE.. வீடு கட்டப் போறீங்களா?

நாமக்கல் மக்களே, வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News February 14, 2026
எருமப்பட்டி அருகே சோகம்: 3 வயது குழந்தை பலி

எருமப்பட்டி அருகே திப்பரமாதேவி கிராமத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன் – கவுதமி தம்பதியரின் மகள் தேவஸ்திரி (3), தாத்தா கந்தசாமியுடன் விவசாய நிலத்திற்குச் சென்றபோது, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். குழந்தையை மீட்டு நாமக்கல் GH கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 14, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தின் 8 தாலுகா அலுவலகங்களில் இன்று (பிப்.14) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம், மொபைல் எண் பதிவு மற்றும் புதிய கார்டு விண்ணப்பம் போன்ற சேவைகளைப் பெறலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலக முகாமில் கலந்துகொண்டு ரேஷன் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT
News February 14, 2026
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (13.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


