News October 24, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.23 நாமக்கல்-( தங்கராஜ் – 9498110895) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News October 24, 2025
ராசிபுரம் வக்கீல் சங்க நிர்வாகி பலி!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் மற்றும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காமராஜ் (55).இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டூவீலரில் சென்றபோது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 23, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 23) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 24) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 23, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (23.10.2025) இரவு ரோந்துப் பணிக்குக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசரத் தேவைக்கு உட்கோட்ட அதிகாரியை தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


