News January 12, 2026

நாமக்கல்: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வே வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News January 24, 2026

நாமக்கல் அருகே பற்றி எரிந்த வீடு!

image

நாமக்கல்: பருத்திப்பள்ளி அடுத்த சோமணம்பட்டியை சேர்ந்த குப்புசாமி என்பவரது கூரை வீட்டில் நேற்று திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து மலமலவென வீடு முழுவதும் தீபற்றியது. தகவலறிந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதில், வீட்டிலிருந்த பொருட்கள் தீக்கு இறையானது. இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 24, 2026

ராசிபுரம் அருகே போதையில் நண்பர் கொலை!

image

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டி, காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த தங்கவேல், நண்பர்களுடன் மது அருந்த சென்றபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். அவர் வீடு திரும்பாத நிலையில், கிணற்றருகே சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாமகிரிப்பேட்டை போலீசார், மது போதையில் தங்கவேலை கீழே தள்ளி கொன்ற நண்பர்கள் ஆனந்தன் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 24, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (23.1.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!