News November 23, 2025
நாமக்கல்: 10வது படித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

நாமக்கல் மக்களே, மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுப் பிரிவில் பல்நோக்கு ஊழியர் (Multi Tasking Staff) பதவியில் மொத்தம் 362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News January 28, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்க்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 82 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 355 முகவர்கள் மூலம் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், முகவர்கள் தங்களுக்குத் தேவையான பால் மற்றும் உபபொருட்களைப் புதிய ஆவின் செயலி (Aavin App) மூலமாகவே முன்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
News January 28, 2026
நாமக்கல் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.
News January 28, 2026
திருச்செங்கோட்டில் விபத்து: வாலிபர் பலி

குமாரபாளையம் பெடரல் வங்கி ஊழியர் அண்கிட் (25), நேற்று மாலை நாமக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ராயர்பாளையம் அருகே எதிர்பாராதவிதமாகச் சாலைத் தடுப்பில் மோதி எதிர்திசையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரியின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


