News February 28, 2026
நாமக்கல்: விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ராஜாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி வெங்கடாசலம் (45). இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 28, 2026
நாமக்கல்: இது தெரியாமல் இனி சிலிண்டர் வாங்காதீங்க!

நாமக்கல் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 28, 2026
நாமக்கல்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

நாமக்கல் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News February 28, 2026
நாமக்கல்: கல்லூரி மாணவர் தற்கொலை!

பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (19) கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பூங்கா நகருக்கு வந்த இவர் தனது நண்பர்களை சந்தித்துள்ளார். இரவில் நண்பர்கள் தூங்க சென்ற பிறகு, இவர் வெளியில் இருந்து நீண்டநேரம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் அவர் தூணில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தவலறிந்து வந்த பீளமேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


