News December 22, 2025

நாமக்கல் விவசாயிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (டிச.23) செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு “மரவள்ளியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை” என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள 04286 266345, 9597746373, 9943008802 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 25, 2025

உஷார்..நாமக்கல்லில் நாளை மின் தடை!

image

நாமக்கல்: மின் பாரமரிப்பு பணி காரணமாக நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன் இளம்பிள்ளை,சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாக்கவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு ஆகிய பகுதிகளில் மின்வினியோம் இருக்காது.

News December 25, 2025

அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

image

நாமக்கல் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் வரும் டிசம்.27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். இதில் புதிய வாக்களர் அடையாள அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம்Voter Helpline App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.SHAREit

News December 25, 2025

நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் வனக்கோட்டத்தை சேர்ந்த 20 ஈரநிலங்களில் வரும் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள புகைப்பட வல்லுனர்கள், மற்றும் பறவை நிபுணர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!