News September 11, 2025
நாமக்கல் : விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில், தமிழக அரசின் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. நாமக்கல்லில் உள்ள அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் சவுக்கு, தேக்கு, மகாகனி ஆகிய மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
Similar News
News November 5, 2025
நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
நாமக்கல்லில் அதிரடி மாற்றம்!

நாமக்கல் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி சேலம் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தில் அவா் பணியாற்றி வந்துள்ளாா். தற்போது, சென்னை வடக்கு மாவட்ட (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலா் ஏ.எஸ்.எழிலரசி பதவி உயா்வு பெற்று நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
News November 5, 2025
நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று நவம்பர்.04 நாமக்கல்-( தங்கராஜ் – 9498170895 ) ,வேலூர் -( சுகுமாரன் – 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092 ), குமாரபாளையம் -( பெருமாள் – 9498169222 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


