News September 28, 2025
நாமக்கல்: விபத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி அள்ளாளபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி (70). விவசாயி. இவர் மொபட்டில் எரையம்பட்டி-வேலகவுண்டம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்த குப்புசாமியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News January 2, 2026
திருச்செங்கோட்டில் மோதல்: அதிரடி கைது!

குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் பிரசாத்தை (24), புதுத்தெருவை சேர்ந்த தனுஷ்(19) முன்விரோதத்தில் கூட்டாளிகளுடன் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் தன்னை தாக்கியது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். இது இருதரப்பு மோதலாக மாறியது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த கார்த்திக் பிரசாத், பூவரசன், நந்தகுமார், கிஷோர், கார்த்தி, பிரசாந்த், தனுஷ் ஆகிய 7 பேரை தி.கோடு ரூரல் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே சிறுவன் பலி!

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியான சின்னமுதலைபட்டி கடக்கால் வீதி தெருவில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மணிகண்டன் என்பவரது 4 வயது மகன் ரோகித் வீட்டின் அருகே புதிதாக பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி ஆழமுள்ள குழியில் நீரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருப்பதால் அந்த குழியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.