News November 28, 2025
நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 28, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர்-4, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள், விவரச் சீரமைப்பு செய்ய வேண்டியவர்கள் அனைவரும் BLO-களை தொடர்பு கொண்டு உடனே விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 28, 2025
நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 28, 2025
மோகனூர் அருகே மொபட் மோதி வியாபாரி பலி!

மணப்பள்ளியை சேர்ந்த வெற்றிலை வியாபாரி தண்டபாணி (50), வேலூரில் வெற்றிலை விற்றுவிட்டு அக்.6-ம் தேதி ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது, மணப்பள்ளி ஈஸ்வரன் கோவில் சாலையின் அருகில் பின்னால் வந்த மொபட் மோதியதில் கடுமையாக காயமடைந்தார். நாமக்கல், கோவை தனியார் மருத்துவமனைகள் மற்றும் பின்னர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று உயிரிழந்தார். மோகனூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


