News April 5, 2024
நாமக்கல்: வாக்காளர் குறித்து அறிவிப்பு
நாமக்கல் ஆட்சியர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 85 வயதுக்கு மேற்பட்ட 4113 வாக்காளர்களும், 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 2546 வாக்காளர்களும் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு 130 மண்டல அலுவலர் தலைமையில் அவர்களது வீடுகளுக்கே சென்று தபால் வாக்குபதிவு செய்யும்பணி இன்றும், நாளையும் நடைபெறும்.
Similar News
News November 19, 2024
நாமக்கல் மாநகராட்சி நாளை சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.1 பெரிய அய்யம்பாளையம் மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.8 கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News November 19, 2024
நாமக்கல் தலைப்பு செய்திகள்
1.நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.ரேப்கோ வங்கியின் 56 வது நிறுவன நாள் கொண்டாட்டம்
3.டூவிலரில் இருந்து முதியவர் தூக்கி வீசப்படும் காட்சி வெளியீடு
4.முத்தங்யிகில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்
5.நாமகிரியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
News November 19, 2024
நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம்
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 19ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் விலையில் மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.40 என்ற விலையிலேயே நீடிக்கிறது.