News January 1, 2026
நாமக்கல் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

சேலம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 22, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 25ந் தேதி காலை 6 மணி அளவில் நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து விழிப்புணர்வு மரத்தான் தொடங்கி உழவர் சந்தை, லட்சுமி நரசிம்மர் கோவில், பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பூங்கா சாலை வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் 500 நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News January 22, 2026
நாமக்கல் அருகே விபத்து: உடல் நசுங்கி பலி!

ஈச்சம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி, தனது மனைவி செல்வியுடன் டூவீலரில் அரியாக்கவுண்டம்பட்டி கரை பகுதி அருகே சென்றபோது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறி விழுந்த ராமசாமி மீது லாரி சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி உயிர் தப்பினார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 22, 2026
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (ஜனவரி. 21) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.00 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இன்று ( ஜனவரி. 22) முதல்முட்டையின் விலை ரூ.5.00 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


