News March 20, 2024
நாமக்கல் வந்த அர்ஜுன் பானர்ஜி

மக்களவைத் தேர்தலை ஒட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்துள்ளது இந்நிலையில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தலைமையில் 19ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜுன் பானர்ஜி உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் நுண் பார்வையாளர்கள் ஆகியோருடன் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.இதில் எஸ்.பி.ராஜேஸ்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News February 14, 2026
நாமக்கல்: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

நாமக்கல் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
News February 14, 2026
நாமக்கல்: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

நாமக்கல் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News February 14, 2026
நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


