News November 19, 2025

நாமக்கல்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க

image

நாமக்கல் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)

Similar News

News November 19, 2025

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை..!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.05 ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.05- ஆக நீடிக்கின்றது. கடந்த ஒன்றாம் தேதி ரூ.5.40 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலை நேற்று ரூ.6.05 ஆக விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

News November 19, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.19) நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138) ,வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), பள்ளிபாளையம் – (டேவிட் பாலு – 9486540373) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News November 19, 2025

நாமக்கல்லில் லிப்ட் கேட்டு பணம், போன் பறிப்பு!

image

நாமக்கல் – மோகனூர் சாலை முல்லைநகரைச் சேர்ந்த விவசாயி பிரேம்குமார் (71), ஸ்கூட்டரில் சென்றபோது லிப்ட் கேட்ட இளைஞர் மிரட்டி அண்ணாநகர் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். கத்தியால் மிரட்டி ரூ.9,500, செல்போன், ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டை பறித்து, பின்னர் கார்டில் இருந்து ரூ.40,000 எடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி அலங்காநத்தம் யோகேஸ்வரன் (19) என்பவர் நேற்று நாமக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!