News November 19, 2025
நாமக்கல்: ரூ.85,000 வரை சம்பளம்.. அரசு வேலை!

நாமக்கல் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். யாருக்காவது பயன்படும் அதிகமாக SHARE பண்ணுங்க!
Similar News
News November 21, 2025
நாமக்கல் மக்களே ரெடியா?

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. பல தனியார் நிறுவனங்கள் மேலாளர், கணினி இயக்குபவர், மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேலாளர், டீம் லீடர், கணக்காளர், காசாளர் போன்ற பணிகளுக்கு ஆட்களை நேரில் தேர்வு செய்ய உள்ளனர். அனைத்து கல்வித் தகுதியுடையோர் காலை 10.30 மணிக்கு கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News November 21, 2025
திருச்செங்கோடு அருகே நேர்ந்த சோகம்!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பில்ட்டு மஞ்சிஹி (28) மற்றும் சோபியா (23) தம்பதி மொஞ்சனூர் அரசம்பாளையம் கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையிலான தகராறுக்குப் பிறகு மஞ்சிஹி வேப்பமரத்தில் தூக்கிட்டு கொண்டார். மனைவி மீட்டாலும், மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
News November 21, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி நேற்று நவம்பர்.20 நாமக்கல்-( தங்கராஜ் – 9498170895 ) ,வேலூர் -( சுகுமாரன் – 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092 ), பள்ளிபாளையம்-( பெருமாள் – 9498169222 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


