News August 8, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து இன்று நள்ளிரவு 1:05 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்ல 12689 சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் வாரந்திர ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. ரயில் பயணிகள் விரைவாக முன்பதிவு செய்து பயணிக்கலாம். நாமக்கலில் இந்த ரயில்கள் புறப்படும் நேரம் திங்கள் அதிகாலை 5:05 மணிக்கு 12690 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் SF ரயில் உள்ளது.
Similar News
News August 8, 2025
நாமக்கல்: முட்டை விலை 5 பைசா உயர்வு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
News August 8, 2025
நாமக்கல்: மத்திய அரசு வேலை: அரிய வாய்ப்பு!

இந்திய விமானப்படைக்கு அக்னிவீரர் பிரிவுக்கு, அக்னிவீரர் ஆட்சேர்ப்பு திரளணி தாம்பரம் விமானப்படை நிலையத்தில் வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் ஆண்களுக்கும் 5-ம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது 04286-222260 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்ககுக்கு<
News August 8, 2025
நாமக்கல்லில் 94.1°F வெப்பம் பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலையாக 94.1° ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும், வேலைக்கு செல்வோரும் அவதியடைந்துள்ளனர்.