News August 6, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை (வெள்ளி) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்ல, மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Similar News

News November 7, 2025

நாமக்கல்: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

1) நாமக்கல் மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 7, 2025

நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 6 சரிவு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன்விலையை கிலோவுக்கு ரூ.6 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

News November 7, 2025

நாமக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

நாமக்கல் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

error: Content is protected !!