News October 25, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை(அக்.26) ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 pm, மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளது. இதில், பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்.
Similar News
News February 11, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களின் குறைதீர் கூட்டம் நாளை 12ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. அது சமயம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
நாமக்கல்: மாற்றம் இன்றி நீடிக்கும் முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.25-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (பிப்.10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி நீடிக்கிறது. முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News February 10, 2026
நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


