News October 14, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயிலில் வருகிற அக்.31ம் தேதி வரை கூடுதலாக ஒரு 3 tier AC பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது. இந்த 22497 திருச்சி ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை (அக்.15) புதன் இரவு 07:45க்கு செல்லும். பயணிகள் பயன்படுத்திக்கொள்ளவும்.

Similar News

News October 27, 2025

வெண்ணந்தூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி!

image

வெண்ணந்தூர் அருகே பொன்பரப்பிப்பட்டி பகுதியை
சேர்ந்தவர் பழனிசாமி (34). கூலித்தொழிலாளி.நேற்று விடுமுறை என்பதால் கட்டிப்பாளையம் ஏரிக்கு தனது நண்பர்கள் 3 பேருடன் மீன் பிடிக்க பழனிசாமி சென்றார்.மீன் பிடிக்க ஏரியில் இறங்கிய பழனிசாமி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர், நீண்ட நேர தேடுதலுக்கு பின் ஏரியில் மூழ்கிய பழனிசாமியின் உடலை மீட்டனர்.

News October 27, 2025

நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ.80 ஆயிரம் மானியம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் விவசாய நிலங்களில் நிரந்தர பந்தல் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது. ‘நிரந்தர பந்தல் அமைப்பு’ என்பது தோட்டக்கலை பயிர்களுக்கு நிலையான ஆதரவை வழங்க உருவாக்கப்பட்ட ஒரு நிரந்தர கட்டமைப்பாகும். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் அல்லது மொத்த தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற, விவசாயிகள் தோட்டக்கலை துறையை அணுகலாம்.ஷேர் பண்ணுங்க!

News October 27, 2025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை 525 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 530 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.101-க் கும், முட்டைக்கோழி கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

error: Content is protected !!