News August 24, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை (திங்கள்கிழமை) 25/8/2025 அதிகாலை 4:20 மணிக்கு ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்ல 07356 ஹூப்ளி – ஹூப்ளி ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம். நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 25, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தாலும், விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் விலை ரூ.5 ஆகவே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.24) நாமக்கல் – தங்கராஜ் (9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.

News August 25, 2025

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

image

ஆலாம்பாளையத்தில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, போதை மாத்திரைகளை விற்றுவந்த 2 இளைஞர்களை போலீசார் இன்று கைது செய்தனர். சந்திரசேகரன் (26), பிரகாஷ் (27) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 50,000 மதிப்புள்ள 192 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். இந்த இளைஞர்கள் பள்ளிபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகளை விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!