News April 20, 2025
நாமக்கல்: முட்டை விலை 20 பைசா குறைவு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப். 20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 3.95 பைசா நிர்ணயிக்கப்பட்டது.
Similar News
News September 10, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (செப். 9) நடைபெற்றது. கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டையின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப். 9) இரவு ரோந்துப் பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
நாமக்கல்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

நாமக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <