News October 26, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 25) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 26) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Similar News
News October 26, 2025
நாமக்கல்: சிலிண்டர் மானியம் வருகிறதா?

சிலிண்டர் மானியம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் HP Gas, Indane, அல்லது Bharatgas ஆகிய சிலிண்டர் நிறுவனத்தின் Logoவை கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் மொபைல் எண் அல்லது LPG ஐடியை உள்ளிடவும். இதன்பிறகு,மானியம் தொடர்பான விவரங்களும் தோன்றும். மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிகலாம்.SHARE பண்ணுங்க
News October 26, 2025
நாமக்கல் ரயிலில் சிக்கி ஊழியா் பலி!

மோகனூா் குமரிபாளையத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜவேலு மகன் கவின் (21). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் மோகனூா் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது சென்னையில் இருந்து போடிநாயக்கனூா் நோக்கிச் சென்ற ரயிலில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நாமக்கல் ரயில்வே போலீஸாா் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 26, 2025
நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாமக்கல்லில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வரும் நவ.01ந் தேதி காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் (ம) பொது நிதி செலவினம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், 100 நாள் வேலை திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


