News October 10, 2025

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 9) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 10) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Similar News

News October 10, 2025

நாமக்கல் வருகிறார் அன்புமணி ராமதாஸ்!

image

நாமக்கல்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸின் நடைபயணம், பொதுக்கூட்டம் வருகின்ற அக்.14ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்த நடைபயணமானது மாலை 04.00 மணிக்கு நேதாஜி சிலை அருகே ஆரம்பித்து பழைய பேருந்து நிலையம் வழியாக குளக்கரை திடல் வந்தடைந்து, மாலை 05.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

News October 10, 2025

நாமக்கல் அருகே அதிரடி கைது!

image

கபிலர்மலை, ரங்கபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 60; விவசாயி இவரது மனைவி சரஸ்வதி, 55; இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் துரைசாமி, 43. நேற்று முன்தினம் இரவு, துரைசாமி குடிபோதையில் பழனிச்சாமி, சரஸ்வதி தம்பதியரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கைகலப்பாக மாறி, துரைசாமி இரும்பு பைப்பால் சரஸ்வதியை தாக்கியுள்ளார். இது குறித்து புகாரின் பெயல் ஜேடர்பாளையம் போலீசார், துரைசாமியை கைது செய்தனர்.

News October 10, 2025

நாமக்கல்: நாளை அக்.10 முகாம் நடைபெறும் இடங்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (10.10.2025) வெள்ளிக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்: நாமக்கல் மாநகராட்சி அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரப்பாளையம் நகராட்சி ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, சீராப்பள்ளி பேரூராட்சி கொங்கு குலாலர் சமுதாயக்கூடம், எலச்சிபாளையம் வட்டாரம் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம், ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!