News April 19, 2025
நாமக்கல்: முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (19-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
Similar News
News September 10, 2025
நாமக்கல்லில் மின் தடை அறிவிப்பு!

நாமக்கல்: வில்லிபாளையம், கெட்டிமேடு துணை மின் நிலையலங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை(செப்.11) வில்லிபாளையம், ஜங்கம்மநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்கக்கன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பில்லூர், கூடச்சேரி, கீழக்கடை, கோணங்கிப்பட்டி, கெட்டிமேடு, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, பாலப்பட்டி, பெருமாப்பட்டி, பொம்மசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (செப். 9) நடைபெற்றது. கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டையின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப். 9) இரவு ரோந்துப் பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.