News August 20, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை. நாளை (வியாழக்கிழமை) 1 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 4 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 20, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.64,000 சம்பளத்தில் வேலை!

நாமக்கல் மக்களே, பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்..? வேலை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா..? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர் சேவை அதிகாரி/ கிளார்க் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 20, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
News August 20, 2025
நாமக்கல்: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் எப்படி?

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம்.ஷேர் பண்ணுங்க!