News April 5, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 12, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (11/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
News April 11, 2025
முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (11-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
News April 11, 2025
பச்சை தண்ணீரில் விளக்கெரியும் அதிசய கோயில்!

ராசிபுரத்தை அடுத்த தட்டாங்குட்டை பகுதியிலுள்ள பச்சை தண்ணீர் மாரியம்மன் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் கோவில் பூசாரி அம்மனுக்கு வழிபாடு நடத்த, ஊர் தர்மகர்த்தாவிடம் விளக்கேற்ற எண்ணெய் கேட்டுள்ளார். அவர் சாமி உண்மை என்றால் விளக்கில் தண்ணீர் ஊற்றி பற்ற வையுங்கள் என்று கூற, பூசாரியும் சன்னதியில் அகல் விளக்கில் தண்ணீரை ஊற்றி விளக்கை ஏற்ற, விளக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த அதிசயம் இன்றும் நடக்கிறது.