News April 2, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்ட வானிலையை பொறுத்தவரையில், இன்று ஒரு மி.மீட்டரும், நாளை (வியாழன்) 5 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 7 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.6 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 3, 2025

நாமக்கல்: தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் “சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” 04.04.2025-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் நடைபெறவுள்ளது.

News April 3, 2025

நாமக்கல்: நாளை சிறப்பு ரயில் இயக்கம்!

image

நாமக்கலில் இருந்து நாளை 3ஆம் தேதி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:34 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.

News April 2, 2025

நாமக்கலின் திருப்பதி பெருமாள் கோவில்

image

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீக்கும் மேலும் திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் சுமையில் உள்ள நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!