News October 27, 2025
நாமக்கல் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, வருகின்ற நவம்பர் 1 அன்று காலை 11.30 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி பயனடையலாம், மேலும் வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 27, 2025
விவாகரத்து: நீதிமன்றத்தை கண்டித்து தர்ணா!

திருச்செங்கோடு வட்டம் சங்ககிரி ரோட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் முன்பு, எலச்சிபாளையம் சின்ன மணலியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், திருச்செங்கோடு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு அளித்தும், இதுவரை விவாகரத்து தராததாக கூறி, நீதிமன்றத்தை கண்டித்து இன்று அக்டோபர் 27 காலை 10:40 மணிக்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
News October 27, 2025
வெண்ணந்தூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி!

வெண்ணந்தூர் அருகே பொன்பரப்பிப்பட்டி பகுதியை
சேர்ந்தவர் பழனிசாமி (34). கூலித்தொழிலாளி.நேற்று விடுமுறை என்பதால் கட்டிப்பாளையம் ஏரிக்கு தனது நண்பர்கள் 3 பேருடன் மீன் பிடிக்க பழனிசாமி சென்றார்.மீன் பிடிக்க ஏரியில் இறங்கிய பழனிசாமி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர், நீண்ட நேர தேடுதலுக்கு பின் ஏரியில் மூழ்கிய பழனிசாமியின் உடலை மீட்டனர்.
News October 27, 2025
நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ.80 ஆயிரம் மானியம்!

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் விவசாய நிலங்களில் நிரந்தர பந்தல் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது. ‘நிரந்தர பந்தல் அமைப்பு’ என்பது தோட்டக்கலை பயிர்களுக்கு நிலையான ஆதரவை வழங்க உருவாக்கப்பட்ட ஒரு நிரந்தர கட்டமைப்பாகும். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் அல்லது மொத்த தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற, விவசாயிகள் தோட்டக்கலை துறையை அணுகலாம்.ஷேர் பண்ணுங்க!


