News October 3, 2025
நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜாமீன் மறுப்பு !

தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது .
Similar News
News October 3, 2025
நாமக்கல்லுக்கு வரும் அன்புமணி ராமதாஸ்!

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக, வரும் அக்டோபர் 14-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனையொட்டி, அன்று நாமக்கல் பூங்கா சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார். இத்தகவலை பாமக மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
News October 3, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கீரம்பூர், நாமக்கல்-637207 என்ற முகவரிக்கு அக்.08ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News October 3, 2025
நாமக்கல்லில் கிராமசபைக் கூட்டம்!

நாமக்கல்லில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வரும் அக்.11ந் தேதி காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் (ம) பொது நிதி செலவினம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், 100 நாள் வேலை திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.