News August 27, 2024
நாமக்கல் மாவட்ட செயலாளர் உதயநிதியுடன் சந்திப்பு

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் நேரில் சந்தித்தார். அப்போது, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மதுராசெந்திலிடம் கேட்டறிந்து, உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
Similar News
News January 26, 2026
நாமக்கல்லில் உச்சகட்ட பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
News January 26, 2026
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.10- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக முட்டை விலை 10 காசுகள் உயர்வடைந்த நிலையில் இன்றும் 5 காசுகள் உயர்வடைந்துள்ளது.