News December 18, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
திருச்செங்கோட்டில் லாரி மோதி விவசாயி பலி

திருச்செங்கோடு கூனாண்டிகாடு பகுதியை சேர்ந்த விவசாயி மாரப்பன் (70), நேற்று முன்தினம் கடைக்கு செல்ல தனது மொபட்டில் திருச்செங்கோடு மலை சுற்றுப்பாதையில் சென்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து வந்த லாரி மொபட் மீது மோதியது. படுகாயம் அடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த காதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 19, 2025
நாமக்கல்: விசைத்தறிகளை நவீனமாக்க மானியம்!

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமாக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
News December 19, 2025
நாமகிரிபேட்டை அருகே வாலிபர் மர்மசாவு!

நாமகிரிபேட்டை, ஈஸ்வரமூர்த்திபாளைத்தில் முத்துலிங்கம் என்பவர் தனது தோட்டத்தின் அருகே செல்போன் கோபுரம் அருகில் நேற்று முன்தினம் 30 வயது ஒருவர் இறந்த நிலையில் இருந்ததை போலீசாருக்கு தெரிவித்தார். விசாரணையில் இறந்தவர் ஈஸ்வரமூர்த்திபாளையம் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என உறுதி செய்யப்பட்டது. மர்மமான முறையில் இறந்த நிகழ்வின் காரணம் குறித்து மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


